எகிப்தில் புகழ்பெற்ற டான்டா சர்ச்சில் குண்டுவெடிப்பு: 15 பேர் உடல் சிதறி பலி

எகிப்தில் புகழ்பெற்ற டான்டா சர்ச்சில் குண்டுவெடிப்பு: 15 பேர் உடல் சிதறி பலி

உலகப்புகழ்பெற்ற டான்டா சர்ச்சில் குண்டுவெடிப்பில் 15க்கும் மேற்பட்டோர் பரிதபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

எகிப்தில் நாட்டின் கெய்ரோ அருகே உள்ள டான்டா நகரத்தில் புகழ்பெற்ற சர்ச் அமைந்துள்ளது. அந்த செயிண்ட் ஜார்ஜ் சர்ச்சில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று காலை திடீரென குண்டுவெடித்தது. அதில் ஏராளமான பொதுமக்கள் உடல் சிதறி பலியாகினர். அதன் காரணமாக சர்ச் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குண்டுவெடிப்பில் 15க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சம்பவத்திற்கு எந்தவித தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கெய்ரோவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 25 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply