எகிப்து விமானத்தை கடத்தியவன் அதிரடி கைது. பயணிகள் பத்திரமாக மீட்பு

எகிப்து விமானத்தை கடத்தியவன் அதிரடி கைது. பயணிகள் பத்திரமாக மீட்பு

hijackஎகிப்து நாட்டின் விமானம் ஒன்று 63 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தீவிரவாதி ஒருவனாம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதுகாப்பு படையினர்களிடன் அதிரடி நடவடிக்கையால் கடத்தல்காரன் கைது செய்யப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

எகிப்து நாட்டில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா என்ற நகரில் இருந்து தலைநகர் கெய்ரோவை நோக்கி எகிப்து ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 56 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகளுடன் இருந்த சயீஃப் அல்தீன் முஸ்தஃபா என்பவர், தனது உடலில் வெடிகுண்டைப் பொருத்தியிருப்பதாகக் கூறி, அந்த விமானத்தை சைப்ரஸ் நாட்டுக்குக் கொண்டு செல்லுமாறு மிரட்டினார். பயணிகளின் உயிரை காப்பாற்ற விமான பைலட்டுக்கள் அவன் கூறியபடி சைப்ரஸ் நாட்டின் லார்னகா விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகளை சயீஃப் அல்தீன் முஸ்தஃபா விடுவித்தான்

பின்னர் அந்த தீவிரவாதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை அதிகாரிகள் நடத்தியபோது, அந்த தீவிரவாதி தனக்கு சைப்ரஸ் நாடு அடைக்கலம் வேண்டும் எனவும், தனது முன்னாள் காதலியை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தான். இவ்வாறு பல மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்த நிலையில் அந்த விமானத்தில் எஞ்சியிருந்த பயணிகளும், பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளியேறினர். அதைத் தொடர்ந்து சயீஃப் அல்தீன் முஸ்தஃபா வேறு வழியின்றி பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தான்.

இந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து எகிப்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷெரீஃப் ஃபாதி கூறியதாவது: எகிப்து ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது. விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும், பணியாளர்களும் நலமுடன் உள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட சயீஃப் அல்தீன் முஸ்தஃபா எகிப்து நாட்டவர் எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விமானத்தைக் கடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். கடத்தப்பட்டபோது அந்த விமானத்தில் 8 அமெரிக்கர்கள், 4 நெதர்லாந்து நாட்டவர், 4 பிரிட்டன் நாட்டவர், ஒரு பிரான்ஸ் நாட்டவர் இருந்ததாகவும், இந்த கடத்தலுக்கு பயங்கரவாதம் காரணமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply