எகிப்து பாராளுமன்ற தேர்தல் செல்லுமா? பரபரப்பு தகவல்
கடந்த 2013ஆம் ஆண்டு எகிப்து அதிபராக இருந்து வந்த முகமது மோர்சி அவர்களை அந்நாட்டின் ராணுவ தளபதி அப்தெல் பட்டா அல் பதவியில் இருந்து நீக்கினார். அவரது ஆதரவில் கடந்த 2014-ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற அல் சிசி, அதிபர் விரைவில் எகிப்து நாட்டில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் முறைப்படி நடத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனாலும் பலமுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளை போட்டியிட விடாமல் அதிபர் அல் சிசி சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் எதிர்கட்சிகள் இல்லாமல், கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமற்று இருப்பதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனியன்று நடைபெற்ற தேர்தலில் வெறும் 15 சதவீத வாக்குப்பதிவும், ஞாயிற்றுகிழமை வெறும் 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக அங்கு செய்தி சேகரித்துவரும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் நேற்று எகிப்து நாட்டிற்கு பொதுவிடுமுறை அறிக்கப்பட்டு வாகுப்பதிவை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. ஆனாலும் நேற்றும் குறைவான வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதால், இந்த தேர்தல் செல்லுமா? என்பது குறித்த சர்ச்சைகள் தற்போது ஏற்பட்டுள்ளது.