மாயமாய் மறைந்த எகிப்து விமானம் விபத்துக்குள்ளனதா? 66 பேர் நிலை என்ன?

மாயமாய் மறைந்த எகிப்து விமானம் விபத்துக்குள்ளனதா? 66 பேர் நிலை என்ன?

flightபிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் இருந்து கெய்ரோ நோக்கிசென்ற எகிப்து விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் இதில் பயணம் செய்த 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

பாரீஸில் இருந்து நேற்று கிளம்பிய எகிப்து நாட்டின் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், குவைத், சவூதி, சூடான், போர்ச்சுகல், அல்ஜீரியா கனடா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த 26 பயணிகளும், 10 சிப்பந்திகள், 30 எகிப்தியர்கள் உட்பட 66 பேர் பயணம் செய்தனர்.

விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபடி, எகிப்து நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்தபோது திடீரென ரேடார் கண்களில் இருந்து மாயமாய் மறைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தோல்வியில் முடிந்தது. ஆனால், எகிப்தின் துறைமுக நகரமான அலெக்ஸாண்டிரியா அருகே மத்திய தரைக்கடலில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதில் பயணிகள் 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  

விபத்தில் சிக்கிய விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளானதை எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் உறுதிசெய்துள்ளார். தொழில்நுட்ப கோளாறா? அல்லது தீவிரவாத செயலா? என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என கெய்ரோ விமான நிலையத்தில் அவர் தெரிவித்தார்.

Leave a Reply