எகிப்து: அரசின் முடிவை எதிர்த்து விமர்சனம் செய்த 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது.

எகிப்து: அரசின் முடிவை எதிர்த்து விமர்சனம் செய்த 2 பத்திரிகையாளர்கள் அதிரடி கைது.
49152099egyptpress
எகிப்து நாட்டுக்கு சொந்தமான செங்கல் பகுதியில் உள்ள இரண்டு தீவுகள் செளதி அரேபியாவுக்கு கொடுக்க எகிப்து அரசு செய்த முடிவை கடுமையாக விமர்சனம் செய்த இரண்டு பத்திரிகையாளர்களை எகிப்து போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கெய்ரோவில் செய்தியாளர்கள் மன்றத்தில் இரண்டு பத்திரிகையாளர்கள் அரசை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்ததாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மன்ற அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். பின்னர் எதிர்க்கட்சி இணையதளமான பவாபெட் யனயெரில் பணிபுரிந்து வந்த ஆசிரியர் உள்பட 2 பத்திரிகையாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பத்திரிகையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக கெய்ரோவில் பதட்டமான சூழ்நிலை இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஆனால் பத்திரிகையாளர் மன்றத்தில் எந்தவித சோதனையும் நடத்தவில்லை எனவும், கைது நடவடிக்கையின் போது பத்திரிகையாளர்களை துன்புறுத்தவில்லை எனவும் எகிப்து நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply