விஜய்சேதுபதியின் 8 வித்தியாசமான வேடங்கள்
இதுவரை தமிழ் சினிமாவில் ‘தசாவதாரம்’ படத்தில் கமல் 10 வேடங்களிலும் ‘நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களிலும் நடித்ததுவே சாதனையாக இருந்து வருகிறது இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி ஒரு படத்தில் 8 வேடங்களில் நடித்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இளம் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கி வரும் ;ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் விஜய்சேதுபதி 8 வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இயக்குனர் ஆறுமுககுமார் விஜய்சேதுபதியின் வேடங்கள் குறித்து கூறியபோது, படத்தின் கதை விஜய்சேதுபதியின் பழங்குடி இன கேரக்டரை மையாக வைத்தே அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியில் நகரத்தில் இருந்து காட்டிற்கு மாறுகிறது. மேலும் பழங்குடி இனத்தவர்களின் தனித்துவமான சடங்குகள் இந்த படத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் கதைப்படி விஜய்சேதுபதி விதவிதமான தோற்றங்களில் தோன்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்களுக்காக அவருக்கு மூன்று ஹேர்ஸ்டைல் கலைஞர்களும், மேக்கப் கலைஞர்களும் நியமனம் செய்யப்பட்டிக்கின்றனர். இவ்வாறு இயக்குனர் ஆறுமுககுமார் கூறியுள்ளார்.
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக், நிஹாரிகா கொனிடெலா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.