இங்கிலாந்தில் அடுத்த வாரம் பொதுத்தேர்தல். இந்தியர்கள் ஓட்டு யாருக்கு?

uk electionஇங்கிலாந்து நாட்டில் மே மாதம் 7ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 650 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும்போட்டி இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த இரண்டு கட்சிகளை தவிர  சுதந்திர ஜனநாயக கட்சியும் தேர்தல் களத்தில் உள்ளது.

ஆளும் கன்சர்வேட்டிக்ன் கட்சி சார்பில் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தொழிலாளர் கட்சி சார்பில் எட் மிலிபேண்ட், சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் நிக் கிளேக் ஆகியோரும் பிரதமர் வேட்பாளராக உள்ளனர். இருப்பினும் டேவிட் கேமரூனுக்கும், எட் மிலிபேண்ட் அவர்களுக்கும் இடையேதான் போட்டி என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன.

தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் இருதரப்பினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் டேவிட் கேமரூன் இங்கிலாந்து நாட்டில் வாழும் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் அவர்களை கவரும் வகையில் தீவிரமாகபிரசாரம் செய்து வருகிறார். இந்தியாவுடனான நட்புறவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் வாக்குறுதி அளித்து வருகிறார். மேலும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு அதிக வசதிகள் செய்து தரவுள்ளதாகவும் அவர் கூறி வருகிறார்.

இங்கிலாந்து ஊடகங்கள் கடைசியாக எடுத்த கருத்துக்கணிப்பின்படி இரு கட்சிகளுக்கும் சம அளவில் வாய்ப்பு இருப்பதாகவும், மீண்டும் டேவிட் கேமரூன் பிரதமராக வருவது இந்தியர்களின் வாக்குகளை பொறுத்தே உள்ளதாகவும் கூறுகின்றது. மூன்றாவது கட்சியான சுதந்திர ஜனநாயக கட்சிக்கு 7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகின்றது.

Leave a Reply