நடத்தை விதிகளை ஒரு லட்சம் முறை மீறுவேன். முடிந்ததை செய்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்துக்கு மம்தா சவால்

நடத்தை விதிகளை ஒரு லட்சம் முறை மீறுவேன். முடிந்ததை செய்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்துக்கு மம்தா சவால்

mamtha angryதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் மாதம் 4, 11, 17, 21, 25, 30 மற்றும் மே மாதம் ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல்வர் மம்தாபானர்ஜி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியை தனி மாவட்டமாக உருவாக்கப் போவதாக தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவது நடத்தை விதிகளுக்குப் புறம்பானது ஆகும். இதனையொட்டி இதுகுறித்து விளக்கம் கேட்டு மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘மம்தா அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அவர் மீது எடுக்கப்பட்டும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “அசன்சோல் தனி மாவட்டமாக்கப்படும் என்று ஒரு முறை, இரு முறை அல்ல ஒரு லட்சம் முறை தெரிவிப்பேன்; தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க விரும்புகிறதோ, அதை எடுக்கட்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.

Leave a Reply