தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு முகாம் திருத்தங்கள் செய்யலாம் என அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் இன்று வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படுவதாகவும் இதில் திருத்தங்கள் செய்யலாம் என்றும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்றும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க பெயரை நீக்க மற்றும் திருத்தங்கள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்படுவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.