வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி திடீர் நிறுத்தம்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி திடீர் நிறுத்தம்

adharவாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணி நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கக்கூடாது என அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  வாக்காளர் அடையாள அட்டையுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மறு உத்தரவு வரும் வரை  நிறுத்துமாறும் தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண்ணை கேட்கும் தேர்தல் அலுவலர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே அரசு திட்டங்களை பெற ஆதார் எண் அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில் தேர்தல் ஆணையமும் தற்போது ஆதார் அட்டை குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளதால், ஆதார் அட்டையின் முக்கியத்துவம் குறைகிறதோ என நினைக்க தோன்றுகிறது.

ஆனால் அதேசமயத்தில் போலிகளைக் களையெடுப்பதற்கான என்இஆர்பிஏபி- திட்டத்தின் இதர வழிமுறைகள் தொடர்ந்து கையாளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, தேசிய வாக்காளர் பட்டியல் தூய்மையாக்குதல் மற்றும் நம்பகமாக்குதல் திட்டத்தை (என்இஆர்பிஏபி) தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வந்தது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் இத்திட்டத்தை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது. போலி வாக்காளர்களைக் களையெடுப்பதே இதன் நோக்கம் என்று கூறி இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. ஆனால் தற்போது திடீரென இந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply