சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தேர்தல் ஆணையர் அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தேர்தல் ஆணையர் அழைப்பு
rajesh lakkani
கடந்த 1991ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ரஜினிகாந்த் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவரை அரசியலில் இழுக்க பாஜக உள்பட பலர் கட்சிகள் இழுக்க முயற்சித்து வரும் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ரஜினிகாந்துக்கு திடீரென அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவர் அழைப்பு விடுத்துள்ளது தேர்தலில் போட்டியிட அல்ல என்றும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு படம் ஒன்றில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளதாகாவும் கூறப்படுகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் பல குறும்படங்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே நயன்தாரா, கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோர் நடித்த குறும்படங்கள் தயாராக உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று தேர்தல் ஆணையத்தின் குறும்படத்திலும் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் விழிப்புணர்வு விளம்பர வீடியோ படப்பிடிப்புக்காக ரூ.10 லட்சம், சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக ரூ.10 லட்சம், எப்.எம். ரேடியோ மூலம் ஒலிபரப்புவதற்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

Leave a Reply