ஜார்கண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை வெற்றியை நோக்கி நடைபோட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா 28 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியடையும் நிலையில் உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 52 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 17 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக- பி.டி.பி. இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா 18 இடங்களிலும், பி.டி.பி. 14 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றது. காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 1,800 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். முதல்வரை எதிர்த்து போட்டியிட்ட பி.டி.பி. வேட்பாளர் அஷ்ரப் முன்னிலை பெற்று வருகிறார்.
இந்த இரு மாநிலங்களின் முடிவுகளும் இன்னும் சிலமணி நேரங்களில் முழுமையாக தெரிந்து யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும்