ஜெயலலிதாவை முட்டிய குட்டியானை திடீர் மரணம்.

jayalalithaa with elephantகடந்த ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றிருந்தபோது அவரை முட்டிய காவேரி என்ற குட்டி யானை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த 6 வயதான குட்டி யானைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா காவேரி என பெயர் சூட்டினார். இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிடச் சென்றார்.

அப்போது குட்டி யானை காவேரி முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது. முதல்வர் குட்டி யானை காவேரிக்கு பழங்களை தனது கையாலேயே கொடுத்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில், அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன காவேரி முதல்வர் ஜெயலலிதாவை தனது துதிக்கையால் லேசாக இடித்து தள்ளியது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானைப்பாகன் உள்பட வனத்துறை அதிகாரிகள் யானையை அடக்கி இழுத்து  சென்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை காவேரி உடல் நலக்குறைவு காரணமாக சோர்வாக இருந்தது. விலங்குகள் நல மருத்துவர்கள் காவேரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சைக்கு பலளனிக்காமல் அந்த யானை நேற்று காவேரி என்ற யானை பரிதாபமாக உயிரிழந்தது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1xZCL7u” standard=”http://www.youtube.com/v/uZHRPGp23U8?fs=1″ vars=”ytid=uZHRPGp23U8&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep2100″ /]

Leave a Reply