ஜியோ டேட்டா கசிந்த விவகாரத்தில் ஹேக்கர் ஒருவர் கைது
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஆரம்பிக்கப்பட்டு மிக குறுகிய காலத்தில் 12 கோடி வாடிக்கையாளர்களை பெற்று சாதனை புரிந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்தது. இந்த தகவலை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்த நிலையில் தற்போது இதுசம்பந்தமாக ஹேக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு அந்த தகவல்கள் “Magicapk.com” என்ற தனியார் இணையதளம் ஒன்றில் வெளியானதாக கூறப்பட்டது. இந்த தகவலை ஜியோ நிறுவனம் மறுத்தாலும் தற்போது ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் ஹேக்கர் ஒருவரை இதுசம்பந்தமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஒரு மென்பொருள் பொறியாளர் என்பதும், ஜியோ தகவல்கள் திருடு போனதற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அவரிடம் இருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு மேலும் விசாரணை செய்யப்பட்டு