நியூராலிங்க்: மனித மூளையுடன் கம்ப்யூட்டரை இணைக்க புதிய திட்டம்.
மனித மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் மனித மூளையுடன் கம்ப்யூட்டரை இணைக்கும் நியூராலிங்க் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணி தொடங்கப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் ட்விட்டர் மூலம் பதில் அளித்த எலான் மஸ்க், நியூரா லேஸ் எனும் வழிமுறை சார்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள முடியும். தற்சமயம் மருத்துவ முறைகளில் எலக்டிரோடு அரே மற்றும் இம்ப்லான்ட்கள் மூலம் பல்வேறு நோய்கள் சரி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் இவை உலகம் முழுக்க சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை மிகவும் அபாயகரமானது என்பதால் இதன் பயன்பாடு அளவு மிகவும் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் உருவாக்கும் நியூரோலின்க் நிறுவனத்தின் திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்நிறுவனம் மனிதர்களை கணினிக்களுடன் இணைந்து செயல்பட வைக்கும் வழிமுறைகளை எளிமையாக்கி, அவற்றில் இருக்கும் அபாயத்தை வெகுவாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.