டுவிட்டருக்கு ஒரு முட்டாளை சி.இ.ஓவாக நியமிப்பேன்: எலான் மஸ்க்
ட்விட்டருக்கு ஒரு முட்டாளை சி.இ.ஓவாக நியமனம் செய்த உடன் நான் சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்துவிடுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் நான் இந்த பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த நக்கலான பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.
— Elon Musk (@elonmusk) December 21, 2022