இமெயிலின் தந்தை டாம்லின்சன் காலமானார்.
இமெயில் எனப்படும் மின்னஞ்சலை கடந்த 1982ஆம் ஆண்டு தமிழரான சிவா அய்யாத்துரை என்பவர் கண்டுபிடித்து அமெரிக்க அரசின் காப்புரிமையை பெற்றிருந்தாலும் இதற்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே அதாவது கடந்த 1971ஆம் ஆண்டே ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு அர்பாநெட் சிஸ்டம் (ARPANET system) முறையில் நெட்ஒர்க் இணைப்பால் கடிதங்களை அனுப்பும் முறையை டாம்லின்சன் என்பவர் கண்டுபிடித்தார். பின்னர் இவரே @ என்ற குறியீட்டுடன் தொலைதூரத்தில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு கடிதங்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்தார். இந்த தொழில்நுட்பத்தை சிவா அய்யாத்துரை நவீனப்படுத்தி தற்போது நடைமுறையில் உள்ள இமெயிலை கண்டுபிடித்தார்.
இந்நிலையில் இமெயிலின் தந்தை என்று அழைக்கப்படும் டாம்லின்சன் அவர்கள் நேற்று முன் தினம் அமெரிக்காவில் தனது 74வது வயதில் மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு இணையதளத்திலும் சமூக இணையதளத்திலும் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கூகுளின் ஜிமெயிலும் தனது குழுவினர்களுடன் டாம்லின்சனுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது. கடந்த 1941ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிறந்த டாம்லின்சன் அமெரிக்காவில் பிறந்து மாஸாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.
Chennai Today News: Email Inventor Ray Tomlinson Dies At 74