முடிவுக்கு வருகிறது யாஹூ சாம்ராஜ்யம். 483 கோடி டாலருக்கு வாங்குகிறது வெர்ஸான் நிறுவனம்
கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் யாஹூ தேடுதளம், யாஹூ இமெயில் ஆகியவை உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கியது. ஆனால் கூகுள் பிரபலம் ஆனவுடன் யாஹூவின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. இந்நிலையில் யாஹூவின் வாடிக்கையாளர்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வருவதை அடுத்து இந்நிறுவனம் விற்பனையாக வாய்ப்புள்ளதாக செய்திகள் கசிந்தது. இந்த செய்தி தற்போது உண்மையாகியுள்ளது.
யாஹூ நிறுவனத்தை வெரைஸான் என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் 483 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த வியாபாரம் முழுமையடையும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் இணையதளத்தில் ஆதிக்கம் செலுத்தி அசைக்க முடியாத சக்தியாக இருந்த யாகூவின் முடிவு இப்படியாகும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்றைய விற்பனை அறிவிப்பை அடுத்து, யாகூவின் சகாப்தம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2008ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து வாங்க முன்வந்தபோது யாஹூ விற்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.