இதுபோன்ற சாலை நம்ம ஊருக்கு எப்போது வரும்? ஆச்சரியப்பட வைக்கும் வீடியோ
நம்மூரில் புத்தம் புதியதாக தார் ரோடு அல்லது சிமிண்ட் ரோடு போட்டால் கூட பெரிய மழை பெய்தால் தாங்காமல் ஒருசில நாட்களில் குண்டும் குழியுமாக ஆகிவிடும். அதுமட்டுமின்றி ஓரளவு சுமாரான மழை பெய்தால் கூட முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சல் கொடுக்கும். இதற்கு காரணம் பாதாள சாக்கடையை மற்றும் கழிவுநீர் செல்லும் குழாய்களை சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை பிரிட்டன் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த Lafarge Tarmac என்ற நிறுவனம் புதுவகையான மெட்டீரியலில் சாலை ஒன்றை அமைத்துள்ளது. இந்த சாலையில் ஆயிரக்கணக்கான தண்ணீர் கொட்டினாலும் ஒருசில நொடிகளில் தண்ணீர் மாயமாகிவிடுகிறது. இதற்கு இந்த சாலை போட பயன்படுத்தப்பட்ட மெட்டீரியல்தான் காரணம் என கூறப்படுகிறது.
நான்கு அடுக்குகளாக போடப்படும் இந்த சாலையின் மூலப்பொருட்கள் மிகவும் உயர்தரமானது. ஒருசில நொடியில் தண்ணீரை உள்ளிழுத்து செல்லும் தன்மை கொண்டது. பிரிட்டனில் உள்ள முக்கிய இடம் ஒன்றில் இந்த மெட்டிரியலில் புதிய சாலை ஒன்றை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை கொட்டி சோதனை செய்யப்பட்டது. தண்ணீர் கொட்டப்பட்ட ஒருசில நொடிகளில் அந்த தண்ணீர் முழுவதும் மாயமான அதிசயத்தை கண்டு அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். தண்ணீர் கொட்டப்பட்ட இடம் மிக சுத்தமாக ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதுகுறித்த வீடியோ ஒன்று இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சாலை நம்மூருக்கு எப்போது வரும் என்ற ஏக்கம்தான் இந்த வீடியோவை பார்க்கும்போது ஏற்படுகிறது.
https://www.youtube.com/watch?v=-iJP7DFt6AU