சாப்பிடும்போது கடைபிடிக்க‍வேண்டிய‌ விதிமுறைகள்

7

நம் முன்னோர்கள் நாம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வாழ எண்ண‍ற்ற வழிமுறைகளைச் சொல்லிச் சென்றுள்ள‍னர். ஆனால் நாம் அயல்நாட்டு நாகரீகம் மீது கொண்டுள்ள‍ மோகத்தினால் பக்க‍ விளைவுகளையும் பின் விளைவுகளை ஏற்படுத்த‍க் கூடிய வெளிநாட்டு உணவு வகைகளை உட்கொண்டு நமது ஆரோக்கியத்தைத்தொலைத்து வருவது வேதனைக்குரிய விஷயம் அல்ல‍வா!

இதோ கீழுள்ள‍வற்றைப் படித்துப்பாருங்கள் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் மட்டும் வாழ முடியாது. அந்த உணவுகளை எப்ப‍டி உண்ண‍ வேண்டும் என்ற விதிமுறைகளையும் வகுத்துச் சென்றுள்ள‍னர் நமது முன்னோர்கள் . தயவு செய்து பொறுமையாக கீழுள்ள‍ வரிகளைப் படித்து உணர வேண்டுகின்றேன்.

நின்றுகொண்டேசாப்பிடுவது தற்போது நாகரீகமாகி விட்ட‍து ஆனால் இது மனித உடலுக்கும் உள்ள‍த்திற்கும் ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும் என்று மருத்துவர்களும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். அதனால் நின்று கொண்டே சாப்பிடும் கலாச்சாரத்திற்கு குட்பை சொல்லிவிட்டு அனைவ ரும் அதுவும் குடும்பத்துடன் ஒன்றாக  அமர்ந்து சாப்பிட்டு வந்தால், என்றென்றைக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் உள்ளத்திற்கு உற்சாகத்தையும் கொடுக்கும்.

சாப்பிடும்போது தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடாமல் அமைதியாக சாப்பிடுங்கள்.

நீங்கள் சாப்பிடும் உணவு எதுவாக இருந்தாலும் நன்றாக மென்று, மாவாக அரைத்த‍ பிறகு விழுங்குங்கள்.

இன்றைய அவசர உலகில் எல்லாமே அவசரம்தான் இந்த உணவையாவது அவசர அவசரமாக சாப்பிடாமல் ஆற அமர அமர்ந்து பொறுமையாக சாப்பிட்டு முடிக்க‍வேண் டும்.

சாப்பிடும் போது தொலைக்காட்சியைப் பார்த்துகொண்டோ அல்ல‍து பத்திரிகை (அ) புத்த‍கங்கள் படித்துக்கொண்டே சாப்பிடக்கூடாது. உங்கள் முழுக்கவனமும் நீங்கள் சாப் பிடும் வரை உங்கள் உணவு மீதே இருக்க‍ வேண்டும்.

சாப்பிடும் நேரத்தில் தேவையின்றி தண்ணீர் குடிக்க வேண்டாம். சாப்பிட்டு முடித்த பிறகு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.

எப்போது சாப்பிட்டாலும் உங்கள் இடது கையை தரையில் ஊன்றிக்கொண்டு சாப்பிடக்கூடாது. நீங்கள் சாப்பிடும்போது உங்களது வலது கையில் சாப்பாட்டில் இருக்கும்போது உங்களது இடது கை உங்கள் மடியில் வைத்திருக்க‍ வேண்டும்.

உங்களுக்கு பிடிக்காத உணவுகள் எதுவாக இருந்தாலும் அதை கஷ்டப்பட்டு சாப்பிடுவதை கைவிட்டு, நீங்கள் விரும்பிய உணவு வகைகளை அளவோடு உண்ண பழக வேண்டும். .

உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் உணவுகள் என்றாலும் சிலருக்கு அது  பிடிக்காது என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லி சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவார்கள் அப்படிச் செய்யாமல் அதையும் சிறிது சாப்பிட்டு பழக வேண்டும்.

என்ன‍தான் கீரை வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தந்தாலும் அந்த கீரை வகை உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க‍வேண்டும்.  காலையிலோ அல்ல‍து மதிய வேளைகளில் சாப்பிட வேண்டும்.

ப‌ழங்கள்உடலுக்கு நல்ல‍து என்றாலும் அதை சாப்பிட்ட‍ உடனே சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட‍ உணவு செரிமான ஆவதற்கு  1 முதல் 3 மணி நேரமா வது உணவை பொறுத்து ஆகும். அதனால் அதன்பின் பழங்களைச் சாப்பிடலாம்.

ப‌லர் வயிறு நிறைய உணவு உட்கொண்டுவிட்டு பின் நடக்க ஆரம்பிப்பார்கள் அது மிகவும் தவறான செயல் ஆகும். ஆனால் சிறிதுதூரம் நடந்து விட்டு அதன்பின் சாப்பிட்டா ல் அதுவே ஆரோக்கிய செயல் ஆகும்.

சாப்பிட்ட‍வுடன் படுக்க‍க்கூடாது 30முதல் 60 நிமிடங்களாவது உட்கார வேண்டும்.

Leave a Reply