மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக் நிறுவனத்தில் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Contract Engineers
மொத்த காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.30,000
வயதுவரம்பு: 26.06.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics – 04
தகுதி: பொறியியல் துறையில் ECE, Electronics & Instrumentation, Electronics போன்ற பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Mechanical – 06
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Mechatronics, Manufacturing, Production, Aeronautical போன்ற பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Computer Science – 13
தகுதி: பொறியியல் துறையில் Computer Science பிரிவில் பி.இ, பி.டெக் உடன் எம்.இ, எம்.டெக் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Propulsion Technology
தகுதி: பொறியியல் துறையில் Chemical பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
5. Opto-Electronics
தகுதி: Optical Instrumentation, Opto-Electronics, Photonics, Engineering Physics துறைகளில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: Senior Contract Engineers
மொத்த காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.39,000
வயதுவரம்பு: 26.06.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Electronics – 05
தகுதி: தகுதி: பொறியியல் துறையில் ECE, Electronics & Instrumentation, Electronics போன்ற பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Mechanical – 02
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Mechatronics, Manufacturing, Production, Aeronautical போன்ற பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Computer Science – 13
தகுதி: பொறியியல் துறையில் Computer Science பிரிவில் எம்.இ, எம்.டெக் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. CAD/CAE – 02
தகுதி: பொறியியல் துறையில் Mechanical பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. Propulsion Technology
தகுதி: பொறியியல் துறையில் Chemical பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Contract Research Fluid Dynamics
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.49,000
வயதுவரம்பு: 26.06.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்
தகுதி: பொறியியல் துறையில் Mechanaical, Aerospace, Aeronautical போன்ற பிரிவுகளில் எம்.இ, எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்பாடுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை Bharat Dynamics Limited, Hyderabad என்ற முகவரிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டி.டி.யாக எடுக்க வேண்டும். அல்லது Credit Card, Debit Card மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்திவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://bdl.ap.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதனுடைய கணினி பிரதியை எடுத்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் பயோ-டேட்டாவையும் ிணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப கணினி பிரதி அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HRD),
Bharat Dynamics Limited,
Kanchanbagh,
Hyderabad-500058
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.07.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://bdl.ap.nic.in/Advt.2015-3.pdf என்ற இணையதளத்தை பார்க்வும்.