ஒரு லட்சம் இடங்கள் காலி: என்ன ஆச்சு இன்ஜினியரிங் படிப்பு?

ஒரு லட்சம் இடங்கள் காலி: என்ன ஆச்சு இன்ஜினியரிங் படிப்பு?

ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் படிப்புகான இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு ஒரு லட்ச்ம் இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இப்படியே போனால் பல இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்படும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சிலிங் கடந்த ஜூலை 17-ம் தேதி ஆரம்பித்து, சிறப்பு பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. பொது பாடப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 23-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. கவுன்சிலிங் துவங்கி, 13 நாட்களை தாண்டி விட்ட நிலையில் மொத்தம் உள்ள 1.75 லட்சம் இடங்களில், இதுவரை 62 ஆயிரத்து 615 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிலவரப்படி 1.13 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 11ம் தேதியுடன் பொது கவுன்சிலிங் முடிகிறது. இந்த 5 நாட்களில், 10 ஆயிரம் இடங்கள் வரை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கவுன்சிலிங்கின் இறுதியில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply