மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.01.2016 தேதயின்படி கணக்கிடப்படும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல், புரொடக்சன், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், என்விரான்மென்டல் இன்ஜினியரிங், கெமிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட பட்டப் படிப்பை 01.07.2013க்கு பின்னர் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.5.000
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கியில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.