இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஷ் கிரிக்கெட் தொடர் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
43 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்து கொண்டிருந்த இங்கிலாந்து அணியை பாலன்ஸ் மற்றும் ரூட் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால், சரிவில் இருந்து மீண்டது.
நேற்றைய ஆட்டநேர முடிவின்போது இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளது.
ரூட் 134 ரன்களும், பாலன்ஸ் 61 ரன்களும், ஸ்டோக்ஸ் 52 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் மற்றும் ஹாசல்வுட் தலா முன்று விக்கெட்டுக்களையும், லியான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இன்னும் சற்று நேரத்தில் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பந்துவீச்சை எந்தளவுக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் தாக்கு பிடிப்பார்கள் என்பது சில நிமிடங்களில் தெரிந்துவிடும்