உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலந்து, கொலம்பியா அணிகள் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலந்து, கொலம்பியா அணிகள் வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரண்டு ஆட்டங்களில் இங்கிலந்து, கொலம்பியா அணிகள் வெற்றி பெற்றன. ஜப்பான் மற்றும் செனேகல் அணியினர் மோதிய போட்டி டிராவில் முடிந்தது

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகள் மோதின. இதில் 6-1 என்ற கோல்கணக்கில் பனாமாவை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

இரண்டாவது ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் செனேகல் அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது

மூன்றாவது ஆட்டத்தில் போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொலம்பியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

Leave a Reply