இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததை அடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது
இன்று நடைபெற்ற 2-வது இன்னிங்சில் இந்தியா 239 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது
இந்த நிலையில் திடீரென 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததை அடுத்து இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 278 ரன்கள் எடுத்தது என்பதும், புஜாரே 90 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது