விஜய்மல்லையாவை நாடு கடத்த முடியாது. இங்கிலாந்து அறிவிப்பு

விஜய்மல்லையாவை நாடு கடத்த முடியாது. இங்கிலாந்து அறிவிப்பு
vijay mallaiah
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு சமீபத்தில் முடக்கியது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் ஒப்படைக்க பிடியாணையும் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது என்றும், அதேவேளையில், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப்பது குறித்து பரிசீலிக்க தயார் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply