இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 76 ரன்கள் பின் தங்கியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்து இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த பின்னர் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இங்கிலாந்து அணியின் பாலன்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி சதமடித்தார். நேற்றைய ஆட்டநேர முடிவின்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. பிளங்கட் 4 ரன்களுடனும், பிரியர் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்திய அணியின் தரப்பில் புவனேஷ்குமார் 4விக்கெட்டுக்களையும், ஜடேஜா, முரளிவிஜய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.