உலகக்கோப்பை டி-20 போட்டி: இங்கிலாந்து vs நியூசிலாந்து. இன்று முதல் அரையிறுதி.
உலகக்கோப்பை டி-20 போட்டி தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து இன்று முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. முதல் அரையிறுதி போட்டி இன்று இரவு டெல்லி மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
லீக் ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காமல் 8 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியை ஒரே ஒரு தோல்வியை மட்டும் சந்தித்த இங்கிலாந்து வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா எதிர்கொள்கிறது. மேற்கிந்திய தீவுகள் கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தாலும், கெய்ல், பிராவோ போன்ற வலிமையான வீரர்கள் உள்ளனர். அதேபோல் இந்திய அணியில் விராத் கோஹ்லி சிம்மசொப்பனமாக உள்ளார். இரண்டு அரையிறுதி போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் மோதும்.