கடைசி பந்தில் சிக்சர். டை ஆனது இங்கிலாந்து-இலங்கை ஆட்டம்.ஃ

கடைசி பந்தில் சிக்சர். டை ஆனது இங்கிலாந்து-இலங்கை ஆட்டம்.ஃ

cricketஇலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி ‘டை’ ஆனது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை 50 ஓவர்களீல் 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ரன்கள் குவித்தது. மாத்யூஸ் 73 ரன்களும், ப்ரசன்னா 59 ரன்களும் எடுத்தனர்.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் பட்லர் மற்றும் வோக்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி இலக்கை நெருங்கினர். பட்லர் 93 ரன்களும், வோக்ஸ் 95 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. முதல் ஐந்து பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணிக்கு ஒரு பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசி பந்தை சந்தித்த பிளங்கெட் சிச்சர் அடித்தார். இதனால் ஆட்டம் டை ஆனது. வோக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Leave a Reply