இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி. இந்தியா போராடி தோல்வி
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்ததால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் இங்கிலாந்து அணி குவித்தது.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் ஜாதவ், பாண்டியா, கோஹ்லி ஆகியோர்களின் சிறப்பான ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது.
கடைசி ஓவரில் 16 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் முதல் இரண்டு பந்தில் பத்து ரன்கள் அடித்ததால் இந்தியா வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 ஓவர்களில் இந்தியா 316 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.