இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளும் நேற்று இரண்டாவது டி-20 போட்டியில் மோதின

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானம் செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் விராத் கோஹ்லி 47 ரன்களும், தோனி 32 ரன்களும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர் வெற்றி பெற 149 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டி20 போட்டி வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும்

Leave a Reply