முத்தரப்பு கிரிக்கெட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி.

cricketஇந்தியா,ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகள் விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால் இங்கிலாந்து பவுலர்களின் அதிரடியால இந்திய அணி 39.3 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஹானே 33 ரன்களும், பின்னி 44 ரன்களூம், தோனி 34 ரன்களும் எடுத்தனர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 27.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. பெல் 88 ரன்களும், டெய்லர் 54 ரன்களும் எடுத்தனர்.

Leave a Reply