பிரிட்டனின் வெளியேற்றத்தால் உலக மொழி அந்தஸ்தை இழக்கின்றதா ஆங்கிலம்
சமீபத்தில் பிரிட்டனில் நடந்த பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற எடுத்துள்ள முடிவு உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகினால் ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பா நாடுகளில் இனிமேல் ஆங்கிலம் இருக்காது என்றும் உல்க மொழி என்ற அந்தஸ்தை ஆங்கிலம் இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டிற்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த அனைத்து நாடுகளுமே, ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இங்கிலாந்து வெளியேறுவதால், ஆங்கிலத்தையும் தங்களது பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இல்லை என்றால், ஆங்கிலமும் இல்லை என்று ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த முடிவு ஆங்கில மொழிக்கு பெரும் இழப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
English language could be dropped from European union