நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் பாலிவுட்டில் கடந்த 2012ஆம் வருடம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படம் இந்தியா முழுவதும் பெற்ற மகத்தான வெற்றியை அடுத்து, தற்போது இந்த படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டது.
பொதுவாக ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் மட்டுமே பெரும் வெற்றி பெறும், ஆனால் அதையும் மீறி வெற்றி பெற்ற ஒரே படம் அமீர்கானின் 3 இடியட்ஸ். இந்த வரிசையில் தற்போது ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ் ஜப்பானில் மாபெரும் வெற்றியை பெற்றது. சமீபத்தில் ஜப்பான் மொழியில் வெளியான இந்த படம் இதுவரை $420,000 அளவு வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குனர் பால்கி அவர்களின் மனைவி கவுரி ஷிண்டே இயக்கிய இந்த படம் ஜப்பானில் வெற்றி அடைந்ததை அடுத்து பிரெஞ்ச், ஜெர்மன், டச்சு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும் என கூறப்படுகிறது.