கோடிக்கணக்கானோர்களுக்கு வைக்கும் அளவுக்கு மை உள்ளதா?

கோடிக்கணக்கானோர்களுக்கு வைக்கும் அளவுக்கு மை உள்ளதா?

ink-fingerரூ.500, ரூ.1000 செல்லாது என்று பிரதமர் அறிவித்ததை அடுத்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் மணிகணக்கில் வரிசையில் நிற்கின்றனர்., இந்நிலையில் உண்மையிலேயே தங்கள் சொந்த பணத்தை மாற்ற வந்தவர்களின் எண்ணிக்கையைவிட கருப்பு பண முதலாளிகளின் பினாமிகள் அதிகளவில் வரிசையில் நின்று பணத்தை மாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதனை தவிர்க்கும் வகையில் இன்று முதல் பணம் எடுக்க வருபவர்களின் விரலில் மை வைக்கப்படும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று அறிவித்திருந்தார். ஒரே நபர் திரும்ப திரும்ப பணம் வாங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பில் விளக்கம் கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு மை வைக்க போதுமான மை உள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து ‘மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ்’ நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியபோது, “அரசு போதுமான அளவு மை கையிருப்பு வைத்திருக்குமாறு கூறி இருந்தது. எங்களிடம், உடனடியாக பயன்படுத்தும் வகையில் போதுமான அளவு மை இருக்கிறது’ என்று கூறியுள்ளார். மை வைக்கும் நடைமுறை தற்போது பெருநகரங்களில் அமலுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply