மதுவிலக்கு மீறல். கிராமம் முழுவதற்கும் அபராதம் விதித்த நீதிபதி
பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் மதுவிலக்கை மீறி குடித்த கிராம மக்கள் அனைவருக்கும் ரூ.5000 அபராதம் விதித்து ஒரு நீதிபதி அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தா என்ற பகுதி மக்கள் மதுவிலக்கு சட்டத்தை மீறி மது அருந்துவதாக கூறப்பட்டது. அந்த நகர மக்களிடம் மதுவிற்பனை செய்யக்கூடாது என்றும் மதுவை குடிக்கக்கூடாது என்றும் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இங்கு மதுவிற்பனை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டதால் புதிதாக திருத்தப்பட்ட சட்டத்தின் படி அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் எஸ்.எம்.தியாகராஜன் அபராதம் விதித்தார்.
இந்த தீர்ப்பு அந்த பகுதியில் மட்டுமின்றி மாநிலம் முழுவதையும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.