வேளாண் ஆராய்ச்சிக்கான இந்தியன் கவுன்சில், மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
AIEEA-UG-2015 மற்றும் AIEEA-PG-2015 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அத்தேர்வுகளுக்கு, இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைகளிலுள்ள வேளாண் துறை ஆகியவற்றில், 15% இளநிலைப் பட்டப் படிப்பிற்கான இடங்களையும், 25% முதுநிலைப் படிப்பிற்கான இடங்களையும் நிரப்புவதற்கு, நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
2015-16ம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க, இத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பத்தை, தேவைக்கேற்ப ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய 2 முறைகளிலும் சமர்ப்பிக்கலாம்.
இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் – ஏப்ரல் 11
முதுநிலைப் படிப்புகளுக்கான தேர்வு – ஏப்ரல் 12
பிஎச்.டி., படிப்புகளுக்கு – ஏப்ரல் 12.
ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனி தகுதி நிலைகள் உள்ளன. விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி – பிப்ரவரி 23.
தொலைதூர பகுதி மாணவர்களுக்கு, பிப்ரவரி 27 வரை அவகாசம் உண்டு.
விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.icar.org.in