தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க ஆயிரம் ரூபாயா? அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
இந்தியாவில் உள்ள பழம்சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக்கட்டணம் 200 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி தாஜ்மஹாலை வெளிநாட்டினர் சுற்றிப்பார்க்க ரூ.1000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த கட்டணம் ரூ.250 என்றுதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதே தாஜ்மஹாலை இந்தியர்கள் சுற்றிப்பார்க்க ரூ.40 மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இதற்கு முன்னர் இந்தியர்களுக்கு ரூ.10 மட்டுமே கட்டணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குதுப்மினார், மகாபலிபுரம் உள்பட பழம்சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு 5 முதல் 15 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 100 முதல் 200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் உயர்த்தியுள்ள இந்த கட்டண உயர்வுக்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருபினும் இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் உயர்த்தியுள்ள இந்த கட்டண உயர்வால் பொதுமக்களின் சுற்றுலா ஆர்வம் குறைந்துவிடும் என்றும் இந்த கட்டணங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
Chennai Today News: Entry fee to Taj Mahal, other monuments hiked from today