அடுத்தடுத்து ஓபிஎஸ்-க்கு ஷாக் கொடுக்கும் ஈபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இன்று காலை வீட்டை காலி செய்யும்படி ஈபிஎஸ் என்று கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் சற்று முன்னர் ஓபிஎஸ் அவர்களின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அடுத்தடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ஷாக் கொடுப்பதோடு திடீர் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது
மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவருமான சாலைமுத்து என்பவர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்த இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் இன்னும் எத்தனை கைதுகள் அரங்கேற போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்