இலங்கையின் 67வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டார்.
1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை நாட்டின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் யாரும் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் 67வது சுதந்திர தினம் நேற்று சிறி ஜெயவர்த்தனபுர, நாடாளுமன்ற வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பங்கேற்றார். இன்றைய நிகழ்ச்சியில் சுமந்திரன் அவர்களும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை.
இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி எடுத்த தீர்மானம் ஒன்றில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்கேற்பதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பேட்ஜ் அணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இருந்த இரா.சம்பந்தன் தான் நேற்று சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.