ராணுவ புரட்சி எதிரொலி. துருக்கி ராணுவத்தை முற்றிலும் மாற்றியமைக்க அதிபர் முடிவு
துருக்கியில் சமீபத்தில் ராணுவ தளபதிகள் இணைந்து ராணுவ புரட்சியை ஏற்படுத்த முயன்றனர். ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க அவர்கள் செய்த முயற்சி பொதுமக்களின் உதவியோடு துருக்கி அரசு தடுத்து நிறுத்தியது. இதையடுத்து ராணுவ தளபதிகள், ராணுவ வீரர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் பேர் ராணுவத்தில் இருந்தும், அரசு பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் துருக்கியில் மீண்டும் ராணுவ புரட்சி ஏற்பட்டு விடாமல் தடுக்கும் வகையில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்கும், போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் அதிக அதிகாரம் வழங்கி எதிர்ப்பு அலைகள் கட்டுப்படுத்தப்பட்டுல்ளது.
மேலும் துருக்கி ராணுவதை முற்றிலும் மாற்றி அமைக்க அதிபர் ரெசிப் ஏர்டோகன் முடிவு செய்துள்ளதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் துருக்கி ராணுவத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.