சூட்கேசுக்குள் மறைந்து எல்லை தாண்ட முயன்ற வாலிபர் கைது. இத்தாலியில் பரபரப்பு
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு வெளிநாட்டுக்கு கள்ளத்தனமாக பாஸ்போர்ட், விசா இன்றி செல்லும் வழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு சாலை வழிகளில் திருட்டுத்தனமான செல்லும் கூட்டத்தை தடுக்க பெரும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்து செல்ல 21 வயது வாலிபர் ஒருவர் முடிவு செய்தார். ஆனால் அவரிடம் முறையான பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. எனவே ஒரு பெரிய சூட்கேசுக்குள் தன்னை தானே அடைத்துக்கொண்டு அவருடைய நண்பர் ஒருவரின் உதவியுடன் சுவிட்சர்லாந்து செல்லும் ரெயிலில் சென்றார்.. ரெயில் சுவிட்சர்லாந்து எல்லையை வந்தடைந்தது. எனவே அந்த சூட்கேஸ் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் இறக்கி வைக்கப்பட்டது.
வெளியே வர நைசாக சூட்கேஸ் ஜிப்பை திறந்தார். அப்போது சூட்கேஸ் தானாக ஆடியதைப் பார்த்த போலீஸ்காரர் என்ன என்று விசாரித்தார். இதற்கிடையே ஜிப்பை திறந்து வாலிபர் பாதி வெளியேறி விட்டார். உடனே அவரை ‘லபக்’ கென கையும் களவுமாக பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர் கள்ளத்தனமாக நாடுவிட்டு நாடு வந்தது தெரிய வந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சுவிட்சர்லாந்து ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
https://www.youtube.com/watch?v=RHwg8-M9FV0