எட்னா எரிமலை வெடித்து சிதறல்

 ஐரோப்பாவில் உள்ள உயரமான மலை என்றழைக்கப்படும் இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்து சிதறியபடி உள்ளது.

எரிமலையின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி பாய்ந்தோடி வரும் தீக்குழம்பு பார்ப்பவர்களின் இதயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

நேற்று முன்தினம் இப்பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கமே உறங்கிக் கொண்டிருந்த எட்னா எரிமலை வெடிக்க காரணம் என தெரியவந்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் தெற்கு இத்தாலியில் உள்ள சிசிலி தீவுப் பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் நேற்று சிசிலி வான்வழிப் பாதையில் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை.

Leave a Reply