விரைவில் வெளியேறுங்கள். பிரிட்டனை துரத்தியடிக்கும் ஐரோப்பிய யூனியன்

விரைவில் வெளியேறுங்கள். பிரிட்டனை துரத்தியடிக்கும் ஐரோப்பிய யூனியன்

brexitஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதாக வாக்கெடுப்பு மூலம் முடிவெடுத்த பின்னர் நீண்ட காலம் தாமதிப்பது சரியாக இருக்காது என்றும் விரைவில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜான்-கிளாட் ஜங்கர் தெரிவித்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஜெர்மன் வானொலியில் அவர் பேசியதாவது: ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்த பின்னரும் அதன் செயலாக்கத்தை அக்டோபர் மாதம் வரை பிரிட்டன் தள்ளி வைத்துள்ளது ஏன் என்று புரியவில்லை. இந்தப் பிரிவினை சுமுகமானதாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும், அது அதிக வலியை ஏற்படுத்தாமல் மிகத் துரிதமாக நிகழ்ந்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம். “பிரெக்ஸிட்’டுக்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்த நாள் ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் மிக மோசமான நாள் என்று கூறினார்.

இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா, வெளியேறலாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பில் 75 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியிருந்தால், 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்ற கருத்தே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத்திருத்தத்தை அரசு கொண்டு வர வேண்டும் என்று ஒரு மனுவில் கூறப்பட்டு அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தும் பேச்சுகே இடமில்லை என்று பிரிட்டன் அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் புதிய பிரதமாக பதவியேற்கவுள்ள தெரசா விரைவில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply