கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம்: ஐரோப்பிய யூனியன் அதிரடி

கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம்: ஐரோப்பிய யூனியன் அதிரடி

உலகின் நம்பர் ஒன் தேடுதள நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோக்கள் என்ற மிகப்பெரிய தொகையினை அபராதமாக ஐரோப்பிய யூனியன் கண்காணிப்பு அமைப்பு விதித்துள்ளது. கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் சேவை, விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய கட்டுப்பாட்டு அமைப்பு கூறியபோது, “ஒரு தேடல் எந்திரமாக கூகுள் நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. இன்னொரு கூகுள் தயாரிப்புக்கு சட்டவிரோதமாக அனுகூலங்களை ஏற்படுத்தியது” என்று கூறியுள்ளது.

கலிபோர்னியா நிறுவனமான மவுண்டன் வியூவுக்கு 90 நாட்களுக்குள் அதன் நடவடிக்கைகளை நிறுத்த அவகாசம் வழங்கியுள்ளது, இல்லையெனில் அதன் தாய் நிறுவனமான அல்ஃபபெட் தனது உலகளாவிய விற்பனையில் 5% அபராதம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைப் போட்டி விதிமுறைகளை கண்காணித்து வரும் அமைப்பு, பிற சிறந்த தெரிவுகள் இருந்தும் கூகுள் தனது ஷாப்பிங் சர்வீசுக்கு சட்ட விரோதமாக முக்கியத்துவம் கொடுத்தது.

ஆனால் கூகுள் நிறுவனமோ, வாடிக்கையாளர்கள் எளிதாக தங்களுக்கு வேண்டிய பொருட்களை தேட தங்களது தேடல் முடிவுகளை பேக்கேஜாக வழங்க முயற்சி செய்கிறது என்று கூறியுள்ளது

Leave a Reply