இந்தியாவின் அல்போன்சா மாம்பழங்களுக்கு எப்பொழுதுமே ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பு இருக்கும். ஓவ்வொரு சீசனிலும் அதிகளவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இந்தவருடம் அல்போன்சா மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடைவிதித்து உள்ளது.
சென்ற வருடம் இந்தியாவில் இருந்து பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆகியவற்றில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் இருந்ததாகவும், இந்த பூச்சிகளால் அந்நாடுகளின் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பின் சுகாதாரத்துக்கான தரக்கட்டுப்பாட்டுக்குழு விடுத்த எச்சரிக்கை காரணமாக இந்த இறக்குமதி தடை செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக கூறிய ஐரோப்பிய சுகாதாரத்துறை ஆயினும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் வரை மட்டுமே இந்த தடை இருக்கும் என அறிவித்துள்ளது.