ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம். நீதிபதிகள் உத்தரவு

ltteஇதுநாள் வரை மற்ற நாடுகளை போல விடுதலைப்புலிகள் இயக்கம் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருந்த  ஐரோப்பிய ஒன்றியம் தற்போது அந்த  கட்டுப்பாடுகளை தளர்த்த முன்வந்துள்ளது.  விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்த  வழக்கின் விசாரணை முடிந்து தற்போது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்துள்ளது.

அந்த தீர்ப்பில், விடுதலைப்புலிகள் மீதான கட்டுப்பாடுகள் இன்றைய சூழ்நிலையில் பொருத்தமற்றவை என்பதால் அவற்றை நீக்க வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

ஆனாலும் இந்த உத்தரவு 3 மாதங்களுக்குப் பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒருவேளை விடுதலைப்புலிகள் மீதான கட்டுப்பாடுகள் அவசியம் தேவையென்றால் அதுகுறித்த ஆலோசனைகளை இரண்டு மாதங்களுக்குள் நீதிமன்றத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க என்று விடுதலைப்புலிகள் சார்பில் வரவேற்கப்பட்டுள்ளது.

Leave a Reply