ஒரே ஒரு எம்.எல்.ஏவுக்கே இந்த ஆட்டமா? தினகரன் ஆதரவாளர்களால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் நேற்று மாலை சபாநாயகர் தனபாலன் அறையில் தொண்டர்கள் புடைசூழ எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
இதற்கு முன்னர் சபாநாயகர் அறையில் எத்தனையோ பதவியேற்புகள் நடைபெற்றுள்ள நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த தினகரனின் பதவியேற்பில் இதுவரை இல்லாத வகையில் தள்ளுமுள்ளுகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது
தினகரனின் ஆதரவாளர்கள் சபாநாயகரின் அறை நிரப்பிய நிலையில் அந்த அறையில் அமர்ந்திருந்த அதிகாரிகளின் நாற்காலிகள் அனைத்தும் கூட்ட நெரிசல் காரணமாக முன்பக்கம் தள்ளப்பட்டதால் அவர்கள் எழுந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் பதவியேற்பு நிகழ்வு முடிந்த நிலையில் தினகரனின் ஆதரவாளர்கள் “இது ஆரம்பம் தான் இனிதான் ஆட்டமே… வருங்கால தலைமைச்செயலகமே” என அதிகாரிகளை நோக்கி கூறியபடியே சென்றதை அதிகாரிகள் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர்.
ஒரே ஒரு எம்.எல்.ஏவுக்கே இந்த ஆட்டம் என்றால் இவர்கள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதுதான் அதிகாரிகளின் அதிர்ச்சிக்கு காரணமாக இருக்குமோ?