முதலில் டெபாசிட் வாங்க முயற்சி செய்யுங்கள். அப்புறம் அட்வைஸ் பண்ணலாம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தனித்தே போட்டியிடும் என தெரிகிறது. இந்நிலையில் பாஜகவின் முன்னணி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தனித்து நின்று அதன் வலிமையை நிரூபிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசிகையில், “தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கருத்து குறித்து நான் கூறுவதற்கு எதுவும் இல்லை. பிற கட்சியினரை விமர்சனம் செய்யும் முன்பு, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இழந்த டெபாசிட்டை வாங்கக் கூடிய நிலைக்கு முன்னேற அக்கட்சியினர் முயல வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்ததையே இளங்கோவன் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக கூட்டணியில் இணையாமல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டிருந்தாலும் டெபாசிட் இழந்திருக்கும். தனது கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் பலம் தெரியாமல் இளங்கோவன் பேசுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.